தோற்றப் பிண்ணனியும் திகதியும்
தற்போது இக்கிராமத்தில் காணப்படும் குடிப்பரம்பல் போல்தான் ஆரம்பகாலத்திலும் வியாபித்தும் இருக்கின்றது .சம்புநகர் மொட்டயான்வெளி ஆலிம் நகர் என விரிவுபட்ட குடியிருப்புக்களுக்கு பட்டியடிப்பிட்டியில் அமைந்திருக்கின்ற அர்ரஹீமியா வித்தியாலயம் தான் பொதுவான பாடசாலையாக இருந்துள்ளது. ஓராண்டு கிலோமீற்றர் கடந்து இப்பாடசாலைக்கு மாணவர்கள் செல்ல வேண்டியிருந்தால் பெண் மாணவிகள் கல்வி கற்றலிலே அதிக நாட்டம் கொள்ளவில்லை ஆண் மாணவர்களுக்கும் காலப்போக்கில் கல்வி கற்றலை இடை நடுவில் நிறுத்தினர்.
மேற்கூறிய காரணங்களை அவதானித்த பள்ளிக்குடியிருப்பு கிராம வளர்ச்சியின் முன்னோடியான மர்ஹீம் MI. அப்துல் மஜீத் ஆலிம் இத்துஷ்ட நிலையை களைவதற்காய் கிராம சபை உறுப்பினர்கள்,பொது மக்கள், ஆர்வலர்கள் முதலானவர்களை ஒன்றுகூட்டி இப்பிரச்சினையை ஆராய்ந்து கிராமத்தின்
கல்வி எழுர்ச்சிக்காக ஒரு பாடசாலை நிறுவ வேண்டும் என்ற அவிப்பிராயத்தை முன்வைத்து கல்முனை பிரதம கல்வி காரியாலயத்தின் அனுமதியோடு மர்ஹீம் ILM மீரா மரைக்காயர், ஜனாப் MI. ஆதம் லெவ்பை,ML. இப்றாலெவ்பை,இஸ்மாயில் லெவ்பை (ஓடாவி), A. அகமது லெவ்பை மரைக்கயர், UL. அப்துல் மஜீத் மனேஜர் முதலானவர்கள் இணைந்து, தற்காலிக ஓலைக்கட்டிடம் ஒன்றை அமைத்து 23 boys, 19 Girls உடன் ஜனாப் MI. நயீம் ஆசிரியரின் தலைமையில் 1952 மார்ச் 17ம் திகதி வியாழக்கிழமை பிரதம கல்வி வித்தியாதர்சினால் (Ε.Ο.Ε.Ρ) " பள்ளிக்குடியிருப்பு கலவன் பாடசாலை" என்ற பெயருடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் வளர்ச்சி போக்கு....
1952-1967 வரை இப்பாடசாலை எவ்வித அரச கட்டிடங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை. பெற்றோர், ஊரார் பிரத்தியேக முயற்சியின் மூலம் பாடசாலை நடத்தப்பட்டு வந்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.தளபாடங்கள், உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள் போன்றவை கூட அருகிலுள்ள வீடுகளிலே
.

பாதுகாக்கப்பட்டுள்ளன. கடின வரட்சியும், பருவ மழையும் இப்பாடசாலையை துயரியலுக்கு உட்படுத்தியுள்ளது. படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை வளர்ச்சி அதிகரிக்க தொடங்கியதால் இட, தளபாடம், ஆசிரியர் முதலான பற்றாக்குறையினால் இவ்வித்தியாலயம் மூச்சு தினறியுள்ளது. இவ்வகுப்பறைப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அருகே காணப்பட்ட "ஜெட்சங்க" கட்டிடத்தில் இரு வகுப்புக்கள் நடாத்தப்பட்டிருக்கின்றன.
1959களில் M.A.Abdhul Majeedh இப்பாடசாலையை பொறுப்பெடுத்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நடத்தி வந்துள்ளார். பள்ளிக்குடியிருப்பு கிராமம் தாழ் நிலப்பிரதேசமாகயால் பருவகால மழையினால் நீர் தேங்கி பாடசாலையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிற்காலத்தில் ஆசிரியர், பெற்றோர் முயற்சியின் மூலம் பல நூறு கியூப் மண் போட்டு நிலம் உயர்த்தப்பட்டது.
1963களில் M.A. முகைதீன் தலைமை ஆசிரயர் பொறுப்பை ஏற்று 1965 வரை இப் பாடசாலையை வழிநடர்த்தி வந்துள்ளார். பல் வேறு துறைகளின் வளர்ச்சிகளை M.முஹைதீன் காலத்தில் தான் இப்பாடசாலை முதன் முதலாக காணுகிறது. நிந்தவூர்தொகுதி பாராளமன்ற உறுப்பினர் கௌரவ M.M.முஸ்தபா அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒரு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டள்ளதானது நம்பிக்கையையும், எதிர் கால பயணம் புதுப் பொலிவு பெற்று விளங்கவும் வழிசெய்ததுடன் "அல்-பாயிஸா வித்தியாலயம்” என்ற பெயர் மாற்றத்துடன் புது வனப்பைப் பெற்று வைைரகின்றது.
இக் கல்லூரியின் வளர்ச்சிப் போக்கில் மாணவ, ஆசிரிய, வகுப்புக்களின் எண்ணிக்கை வளர்ச்சி அவதானிக்கத்தக்கது. 1952களில் ஆரம்பிக்கப்பட்ட தரம் 1 தொடராக 5 வரை வளர்ந்து 1968களில் தரம் 6-7 வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு தரம் 2 வகைப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு அவ்வாறாக வளர்ச்சியடைந்து இன்று G.C.E (A/L) கலைப்பிரிவு மற்றும் வர்த்தகப்பிரிவும் உருவாக்கம் பெற்று கானப்படுகிறது.
46 மாணவர்களுடன் காள்கோலான இப் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையில் துரித வளர்ச்சியை காட்டி நிற்பது கவனிக்கத்தக்கது. தற்போது 840 மாணவர்களும் 59ஆசிரியர்களும் என விரிந்து காணப்படுகிறது.






