அகிலம் ஆளும் ஞாயனே!
உன் அருளை நாமும் நாடினோம் - II
ஐந்து வேளை தொழுது நாம்
அனைத்தும் உன்னை வேண்டினோம் - II (அகிலம்)
அண்ணல் நபியின் நல்வழி
வாழ்க்கை முறையை தந்தருள்
பாவ வழிகள் நீக்கியே
பயிலும் ஞானம் தந்தருள் II (அகிலம் )
பள்ளிக்குடியிருப் பூரெங்கள்
பசுமை எழிலகள் கழனிகள்
நின்றிலெங்கும் அல்-பாயிஷா
மாணவர் நாம் ஒளி பெற II (அகிலம்)
தீன் முதலாய் கல்வியும்
திகழும் கலைகள் வர்த்தகம்
தொழில்கள் நுட்பம் மருத்துவம்
பயிலும் ஞானம் தந்தருள் II (அகிலம்)






